நந்தீஸ்வரர் – பூஜாவிதி

Posted on Updated on

எண்சீர் விருத்தம்

1. கேளப்பா ஓம்ஸ்ரீ கங்கென்று ந்தான்
கொடியாக மூலத்தில் கும்பித் தக்கால்
வாளப்பா பழந்தெங்கவல் வடைகள் தோசை
வளமாவிக் கினர்க்குப் புட்ப பரிம ளங்கள்
நாளப்பா மனமடங்கித் தோத்ரஞ் செய்து
நலமான விக்கினரைப் பூசித் தக்கால்
ஆளப்பா ஆசீர்வா தங்க ளீவார்
அப்பனே விக்கினரைப் பூசை செய்யே!

2. செய்யப்பா விக்கினர்தம் பூசை சொன்னேன்;
செயமான சண்முகவன் பூசை கேளு;
வையப்பா சங்வங்மங் சரவ ணாய
வளமாக அனாகதத்தில் பூசை பண்ணு;
வையப்பா புட்பரி மளங்கள் கொண்டு
மைந்தனே தூபநை வேத்யங் காட்டி;
கையப்பா கனகசபை யதிலே பூசிக்;
கண்மணியே சண்முகத்தை வரங்கள் கேளே.

3. காணப்பா ஆசார பூசை சொன்னேன்;
கண்மணியே சிவபூசை சொல்லக் கேளு;
வாணப்பா நமசிவய கிம்ஆம் என்று
வளமாகப் பூரணத்தி லிருத்திக் கொண்டே
ஆனப்பா தூபதீப நைவேத் யத்தோ
டப்பனே சதாசிவத்தைத் தோத்தி ரஞ்செய்;
மாணப்பா நீகேட்ட தெல்லா மீவார்;
மைந்தனே சிவத்தினுடைய மகிமை தானே;

4. தானான சிவத்தினுடைப் பூசை சொன்னேன்;
தன்மையுள்ள சக்தியுடைப் பூசை கேளு;
வானான இம்மென்றுங் கும்ப கத்தில்
வட்டிவள மாகவொரு மனமாய் நின்று
ஆனான கதம்பகத் தூரி புட்பம்
அப்பனே பால்பழங்கள் வத்து வைத்து
மானான தேவியைத்தான் தோத்தி ரித்து
மைந்தனே சாட்டாங்கச் சரணம் பண்ணே.

5. பண்ணப்பா என்னவம்மா வென்று கேளு;
பலவிதமாய் நீதொடுத்த வெல்லாம் மெய்யாம்;
அண்ணப்பா வென்றவளே சொன்னாற் போதும்;
அப்பனே யட்சரத்தில் பலிக்கும் பாரு,
வன்னப்பா சத்தியுடைப் பூசை சொன்னேன்;
வளமான சிவத்தினுடைப் பூசை சொன்னேன்;
கண்ணப்பா விண்ணுபூசை சொல்லக் கேளு;
கண்மணியே மங்நங்சிங் கென்றே ஏத்தே;

6. ஏத்தப்பா புட்பரி மளங்கள் சார்த்தி
என் மகனே கதம்பகத் தூரி சார்த்து;
வாத்தப்பா சங்கீதத் துடனே பூசி
வளமான விண்ணுவுக்குப் பூசி பூசி;
போற்றப்பா மனமடங்கிப் பத்தியாகப்
போற்றவே விண்ணுவவர் கேட்ட தீவார்;
ஆற்றப்பா விட்டுணுவின் பூசை சொன்னேன்;
அகார கெசமுகவன் பூசை கேளே;

இரேசக பூஜை

7. பாரப்பா ரேசகத்தின் பூசை கேளு;
பண்பான ரேசகத்தின் ஆமென் றேத்தி
ஆரப்பா நைவேத்யங் கும்ப கஞ்செய்
தப்பனே ரேசகத்தில் மனத்தை நாட்டு;
வாரப்பா மனமதுரே சகமே யாச்சு;
வளமான ரேசகந்தான் வசிய மாச்சு;
நாரப்பா ரேசகத்தின் பூசை சொன்னேன்;
நலமான பூரகத்தின் பூசை கேளே;

பூரக பூசை

8. கேளப்பா மணிபூர கத்தில் மைந்தா!
கெடியாக இம்மென்று கும்பித் தேத்து;
வாளப்பா வகையாக நின்று கொண்டு
வளமான பூரகத்திற் றோத்ரம் பண்ணி
வாளப்பா வேண்டியவாம் வரங்கள் கேளு;
வளமாக விண்ணுவர மீவார் பாரு;
ஆளப்பா பூரகத்தின் பூசை சொன்னேன்;
அப்பனே கும்பகத்தின் பூசை யாமே.

கும்பக பூசை

9. ஆமப்பா கும்பகத்துள் உம்மென் நாடி
அப்பனே மனத்தைக்கும் பகத்தில் வைத்து
வாமப்பா பூசைநை வேத்யஞ் செய்து
வளமான கும்பகத்தை மனத்தால் வேண்டிக்
காமப்பா கும்பகத்தை வரங்கள் கேளு;
கண்மணியே வேண்டுவர மீவா ரையா;
நாமப்பா சூரியன்றன் பூசை கேளு;
நலமாக மங்ஙுசிங் கென்று சொல்லே.

சூரியன் பூசை

10. சொல்லப்பா சூரியகும் பகமே செய்து
சொற்பெரிய பூசைநை வேத்யஞ் செய்தே
அல்லப்பா சாட்டாங்க சரணஞ் செய்தே
அப்பனே தோத்திரஞ்செய் கும்ப கத்தை;
மல்லப்பா அட்டசவு பாக்ய மீவார்;
அகத்தியர்தாம் கும்பகத்தில் வரங்க ளீவார்;
வல்லப்பா சூரியன்றன் பூசை சொன்னேன்;
வளமான சந்திரன்றன் பூசை கேளே;

சந்திர பூசை

11. கேளப்பா யங்ஙுநங் கென்று கும்பி,
கெடியாகப் பால்பழம்பா யாசம் வைத்தே
ஆளப்பா தூபதீப நைவேத யஞ்செய்
தப்பனே சந்திரனைத் தோத்தி ரித்து
வாளப்பா சோடச்சந் திரனில் நின்று
வளமான சந்திரனை வரங்கள் கேளு!
நாளப்பா வேணவர மீவா ரையா!
நலமான சந்திரன்றன் மகிமை பாரே.

சனி பூசை

12. பாரப்பா சனிபூசை சொல்லக் கேளு;
பண்பான வங்கென்றுஞ் சங்கென் றுந்தான்
நாரப்பா மேருவிலே குந்திக் கொண்டு
நலமாகத் தோத்தரித்துப் பூசை செய்நீ;
வாரப்பா தூபநை வேத்யத் தோடு
வளமாகத் தோத்திரித்துப் பானஞ் செய்து
ஆரப்பா வேணவரங் கேட்டுக் கொண்டே
அப்பனே யட்சணத்தி லீவார் காணே.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s