ஔவையார் குறள்

Posted on

ஔவையார் குறள்

தருமம் பொருள்காமம் வீடெனும் நான்கும்
உருவத்தா லாய பயன்.

ஈச னெனக்கருதி யெல்லா வுயிர்களையும்
நேசத்தால் நீநினைந்து கொள்.

மெய்ப்பால் அறியாத மூடர்தம் நெஞ்சத்தின்
அப்பாலே நிற்குஞ் சிவம்.

உடம்பினாற் பெற்ற பயனாவ தெல்லாம்
திடம்பட ஈசனைத் தேடு.

தன்னை யறியு மறிவு தனைப்பெறில்
பின்னைப் பிறப்பில்லை வீடு.

எண்ணிறந்த யோனி பலவாய்ப் பரிந்தெங்கும்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்.

விண்ணிறைந்து நின்ற சுடர்போலச் சீவர்கள்
கண்ணிறைந்து நிற்குஞ் சிவம்.

நினைப்பும் மறப்புமில் லாதவர் நெஞ்சந்
தனைப்பிரி யாது சிவம்.

நரம்பெனும் நாடி யிடைமினுக் கெல்லாம்
உரம்பெறும் நாடியொன் றுண்டு.

உந்தி முதலாகி ஓங்காரத் துட்பொருளாய்
நின்றது நாடி நிலை.

உந்தியி னுள்ளே ஒருங்கச் சுடர்பாய்ச்சில்
அந்தி யழலுருவ மாம்.

நாபி யகத்தே நலனுற நோக்கிடில்
சாவது மில்லை யுடம்பு.

ஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின்
ஓவிய மாகு முடம்பு.

மயிர்க்கால் வழியெல்லாம் மாய்கின்ற வாயு
உயிர்ப்பின்றி யுள்ளே பதி

மூலத்திற் றோன்றி முடிவிலிரு நான்காகிக்
கால்வெளியிற் பன்னிரண்டாங் காண்.

வாசலீ ரைந்து மயங்கிய வாயுவை
ஈசன்றன் வாசலி லேற்று;

சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில்
முத்திக்கு மூலம் அது.

வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுட் பெருக்கமுண் டாம்;

அசபை யறிந்துள்ளே அழலெழ நோக்கில்
இசையாது மண்ணிற் பிறப்பு.

ஓசையி னுள்ளே உதிக்கின்ற தொன்றுண்டு
வாசமலர் நாற்றம்போல் வந்து.

துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு.

அடைத்திட்ட வாசலின் மேல்மனம் வைத்துப்
படைத்தவன் தன்னையே பார்.

எழுஞ்சுட ருச்சியின் மேல்மனம் வைக்கத்
தொழிலொன் றிலாத சுடர்.

கண்ணகத்தே நின்று களி தருமே காணுங்கால்
உன்னகத்தே நின்ற வொளி.

உரைசெயு மோசை உரைசெய் பவர்க்கு
நரைதிரை யில்லை நமன்.

பேசு மெழுத்துடன் பேசா எழுத்துறில்
ஆசான் பரநந்தி நமன்.

நின்ற எழுத்துடன் நில்லா எழுத்தினை
ஒன்றுவிக்கி லோன்றே யுளது.

வாக்கும் மனமும் இறந்த பொருள்காணில்
ஆக்கைக் கழிவில்லை யாம்.

கூடக மான குறியெழுத்தைத் தானறியில்
வீடக மாகும் விரைந்து.

பிறந்திட மாலிடம் பேரா திருப்பின்
இறந்தடம் வன்னி யிடல்

வலத்தில் சனிக்கே யிராப்பகல் வாயு
செலுத்துப்பே ராது செயல்;

மயிர்முனையிற் பாதி மனத்தறி வுண்டேல்
அயிர்ப்புண்டங் காதி நிலை.

உறக்கம் உணர்வு பசிகெடப் பட்டால்
பிறக்கவும் வேண்டா பிறப்பு.

நினைப்பும் மறப்பும் நெடும்பசியும் அற்றால்
அனைத்துலகும் வீடாம் அது.

மறவா நினையா மவுனத் திருக்கில்
பிறவா ரிறவார் பினை.

அண்டத் திலுமிந்த வாறென் றறிந்திடு
பிண்டத் திலுமதுவே பேசு.

சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம்
பாருமின் ஈது பயன்.

மதியொடு வன்னியொன் றாகவே வந்தால்
கதிரவ னாமென்று காண்.

தோற்றுங் கதிரவ னுண்மதி புக்கிடில்
சாற்றும் அமாவாசை தான்.

மதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில்
உதிக்குமாம் பூரணைச் சொல்.

ஓசையில் சத்தம், முட்டையில் உயிர்ப்பு, வித்தில் சத்தாகிய முளை, பூவில் வாசம், பழத்தில் சுவை இரும்புண்ட நீரைப் பிரித்துக்காட்ட இயலாமை போல நிறைந்த எள்ளிலெண்ணெய், பாலில் நெய் கரும்பிற் சர்க்கரை, தேயுவில் அக்கினி, சொல் முடிவில் பொருள் தோன்றுதல் போல அகநோக்குடையவர் காண்பர். நால்வகைத் தோற்றத்தில் மானிடமென்னும் வடிவங்கொண்டும் மேற்கண்ட அனுபவங்களை அடையாமல் உலகம் மெச்சச் சரீரமீது பல வேடங்களைத் தரித்து, நான் யோகி, சோகி; பரதேசி; தம்பிரான்; சாமி; தவசி; தாசன்; பத்தன் என்று வீண் காலங்களைப் போக்குவதனால் அருமையான பிறவி வீணாய்ப் பிருதிவியில் இலயமாய்விடும் தான்தான் என்பது யாது? அதைச் சூழ்ந்த கருவி கரணாதிகள் எவ்வாறுதித்து எவ்வாறொடுங்கும்? எனச் சித்தாந்தமுற்று நிற்பதே எம்மதச் சார்பினரும் பெறும் நிலையாகும்.

திருவருள் போகத்தையளித்து செனன மரணத் துயரத்தை நீக்கி, துரியாதீத நிலையிலிருந்தும் குருவிற்கு உடல் பொருளாவியெனும் மூன்றையும் (சரீரத்தையும், உயிர்ப்பையும் அறிவையும்) தத்தம் செய்த மாணாக்கருள் மந்த, மந்தரதர, தீவிர, அதிதீவிர பக்குவத்திரயங்கள் நான்கு விதமாயிருக்கின்றன. அவருள்ளும் பிரமசரியம் கிருகஸ்தம், சன்னியாசம், வானப்பிரஸ்தம், அதிவாணாசிரமம் பெற்றவர்களாயுமிருக்கின்றனர்.

இருக்கு, எசுர் சாம, அதர்வணமாகிய நான்கு வேதத்தில் இருக்கும் ஞானகண்டத்துள் தைத்திரிய உபநிஷத்தில் பிராக்கியான பிரமமெனும் குரு வாக்கியம் அறிவே பிரமம் என்பது, எசுர் வேத அயித்திரிய உபநிஷத்தில், அகம், பிரமா அஸ்மி என்பது சீடன் வாக்கியம் நானே பிரமம் என்பது சாம வேத ஞான கண்டத்துள் சாந்தோக்கிய உபநிஷத்தில், தத்துவம் அசி எனும் வாக்கியம் நீயானாய் அதர்வண வேத ஞான கண்டத்து மாண்டோக்கிய உபநிஷத்தில், என்னுடைய ஆத்துமாவே பிரமமாய் விளங்குகின்றது. இவ்வனுபவம் ஒரு கடாக்ஷத்தால் சுவானுபவமாக வேண்டும்.

பஞ்சாக்ஷரம்: நகரம், அருட்சத்தி தேகத்தைத் தரும், பிராரத்துவத்தை அனுபவிப்பது, மகரம் ஆண்வமலம், அசுத்தமாயை; சிகரம் சிவம், வகரம்; அருள்; சகரம் சீவன் ஆதலால், மகா அசுத்த மாயை நீங்கில்,  அருட்சத்தி செய்கையான நகரச் செய்கையொடுங்கும், பிறகு யகர சீவன் வகர அருளால் சிவத்தையடையுமெனவும் நகரமாகிய சேரியை நஞ்சென வெறுத்து மகரமாகிய மயலெல்லாம் வேரறக்களைந்து, சிகரமாகிய வனத்தினிலிருந்திளைப்பாறி. சிகரமாகிய சிவகதியடைந்தனன் சீவனென்பது அனுபவிகள் வாக்கியம், ஆகையால், நகரமகாரத்தை நீக்கி மற்ற மூன்று அட்சரங்களை இருதலை மாணிக்கமாகத் தியானிக்கின்றனர். இவை ஆகமவிதிப்படி கூறியவாறிருக்கின்றன.

பிரணவ பஞ்சாக்ஷர விவரம்: கணபதி, நாசி சுவாச முன்னிலையில் 4 வித பேதங்களையறியும்; அப்பேதங்கள் அறிவது இடகலை பிங்கலையும் சுழுமுனையில் கூடில் நீங்கும் ஓங்கார சித்தி, பிரமன், நாவு பிருதிவியில் நீ விதச் சுவைகளறியும் அறிவது நீங்கில் நகாரம் சித்தி, நேத்திரம், சலம் அப்பு 10 வித பேதங்களாகிய பஞ்சவர்ணம் உயரம் குள்ளம் சிறுத்தல் பெருத்தலாமென அறிவது நீங்கில் மகார சித்தியாகும்.

சர்மம்: தீ தேயு இவை முன்னிலையில் சூடு குளிர்ச்சிமிருந்து கடினமென அறியும் பரிச பேதம் 12ம் அறிவது நீங்கில், சிகர சித்தியாகும்.

செவி வாயு ஆகாய அமிசம்: 16 வித அக்ஷர பேதங்களை அறிவது நீங்கில் வகரம் சித்தியாகும்.

புருவமத்தி ஆகாயம்: அவ்விடம் விருப்பும் வெறுப்புமறியும் இரண்டு தன்மை நீங்கில் யகார மனம் சித்தியாகும். இவ்வுகை சத்த பரிச ரூப ரச கந்தங்களறியும் மனம் அசைவற, அம்பலமாகிய உச்சிக் குழியில் சங்கல்ப  மிலாததாகிய  அறிவு சுயம்பிரகாசமாய் விளங்குமெனத் தவத்தின் செப்பியிருக்கின்றனர். இதை 51 அட்சரமென்று புகல்வர்.

ஆகிருஷ்ணம் தம்பனம் நகரம் மோகனம் மகரம் பேதனமாரணம் சிகரம், வித்வேஷ்ணம் உச்சாடனம் வக்ரம் வசியம் யகரமாகும்.

நகரம் ஆண் என்றும் அதற்கு மூன்றாவது சிகரம், பெண்ணென்றும், ஆண் எழுத்தைச் சுற்றிப் பெண்ணெழுத்து  இருக்க, அவ்வகையாக ஒவ்வோர் எழுத்திற்கும் மூன்றாவது எழுத்துப் பெண்ணெழுத்தாகச் சக்கரங்களிலடைகின்றன.

பன்னிரண்டு காலான புரவி யப்பா,
பாங்கான மூலவெளி தன்னில் நிற்கும்;

நன்னயமாய் வாசிதனி லேறிக் கொண்டு
நாட்டி யந்த நடுவீதி தன்னில் நின்றால்

முன்னின்ற முப்பாழுக் கப்பா லேயோர்
முகப்புண்டு முச்சந்தி வந்து கூடும்;
சின்னஞ்சிறு வாசல்கடந் தப்பாற் சென்றாற்
சிதம்பரமும் காணமுத்தி சித்தி யாமே.

பிரணவமென்னும் ஓங்காரத்தில் அகார சோதி பிந்து உதித்து, இதில் நகரமகரமுதித்து உகாரவொலியால் நாதமுதித்து இதில் சிகர வகரமுதித்து, மகரத்தில் யகர ஆன்மா தோன்றியதெனவும், நகரம், திரை; மகரம் மால், சிகரம் பதி; வகரம் திரை; யகரம் சீவாக்ஷரமாய் விளங்கும், ஏகாக்ஷரம்; திரியாக்ஷரம், பஞ்சாக்ஷரம் சடாக்ஷரம் அஷ்டாக்ஷரமாகச் சிந்திப்பதெல்லாம் பகிர்முக நோக்குடையதாயிருக்கிறது. அக்ஷரமானது அச்சரமாம் எனக் கூறுவதில் சரம் பார்ப்போன் பரம் பார்க்ககூடும்.

அகாரமான நேரத்தில் மனோன்மணியென்னும் மனமானது அறிவு சதாசிவமாயிலங்கும், அறிவு என்பதில் ஆகாரம் சூரிய கலையாகவும் உகாரம் சந்திர கலையாகவும்  றிகர்ரம் சுழுமுனையாவுமிருக்கின்றன. இம்மூன்றுங் கூடியது. அறிவு. இவ்வகையுடையவர். அறிவுடையவர். சிங்கார இடைபிங்கலை சங்காரவழி போகாமல் பொங்க நிறுத்தி எங்கள் குருராயன் பாதம் போற்றும்படி முத்துத் தாண்டவ சுவாமிகள் செப்பினர். இச்சாபிராரத்துவம், அனிச்சா பிராரத்துவம், பரஇச்சா பிராரத்துவமாக அனுபவித்து வருவதில் இவனது செயலால் யாதொரு விவகாரத்தையும் நடத்தாமல் யாவும் கடவுள் செயலாக முடியவேண்டுமென நிச்சயமுடையவரானால் அவர் அடிமை திரமாக ஆட்கொள்ளக்கூடும்.

எதிரிட்டிருக்கும் மரணத்திற்குள் கொடுமையான காலனுக்கு ஏவலாளிகளாகிய 4 4 4 8 வியாதிக்கும் மரணத்திற்கும் மிகப் பயந்தவர்கள் உள்ளம் ஆதி தீவிரமாய் நன் முயற்சியில் இருப்பார்கள்.

புவியன்கண் மானிடங்கள் அடியிற் காணும் பேதகங்கள் ஒருவாரெனக் கூற யாவரால் முடியும்?

ஆத்துமம்

வேதாந்திகள் : இவர்கள் ஞெப்தி மாத்திரமே ஆத்துமா என்றுரைப்பார்கள்.

கூடஸ்தர்: பிரமம் விடயங்களைத் தெரிந்து அவைகளில் மறைந்த பிறகு அவை கன்ன ரூபமென்று அறிவதே ஆத்தும விஷய சிதாகாச சீவன் என்பர்.

பாசுபத கபாலிகா விரதர்: நித்திய வியாபக சைதன்னியமே ஆத்துமா என்பர்.

சாங்கிய பதஞ்சலிகர்: அசங்க சின்னமாத்திரமே ஆத்துமா என்பர்.

நியாய வைசேடிகர்: ககனம் போல் மகத் பரிணாமனாய்ப் பரிஷாணம் போல் சடரூபனானாலும் மனம் சம்போகத்தில் சித்து சம்யுக்தனாயிருப்பது ஆத்துமா என்பர்.

சைனர் : தேகாதி விலக்ஷணனாய், தேகபரிணமிதனாய் பரிணமித மத்தியில் சாங்கோச விகாச தர்மமே ஆத்மா என்பர்.

கவுள யாமள சாத்துவீகர்: ஆனந்தமாக நிற்றலே ஆத்துமா என்பர்.

லௌகீகர்: தேக புத்திர களத்திராதிகளின் ரூபமே ஆத்துமா என்பர்.

உலக வாசிகள்: தூல சரீரமே ஆத்துமா என்பர்.

சார்வாகர்: தேகம் நீங்கியபோது பார்த்தேன் கேட்டேனென்று சொல்வதும் நீங்குவதால் பஞ்சேந்திரியமே ஆத்துமா என்பர்.

சார்வாக ஏகதேசர்கூ: பிராண வாயு போன பின்பு இந்திரிய மில்லாமையால், பிராண வாயுவே ஆத்துமா என்பர்.

உபாசகர்: மனமில்லாதபொழுது பிராணவாயு நீங்கலால் மனமே ஆத்துமா என்பர்.

கணிக வாதியர்: புத்தியில்லாத போது மனம் சலிக்கிற படியால் புத்தியே ஆத்மா என்பர்.

பௌத்தர்: சுழுத்தியில் அந்தக்கரணமுதல் சகல இந்திரியங்களும் இலயமடைகின்றபடியால், சூனியமே ஆத்மா என்பர்.

பட்டாசாரியர்: சுழுத்தியில் சூனியமென்று அறிந்து சாக்கிரத்தில் வந்து சொல்வதால் சத்தே ஆத்துமா என்பர்.

அந்தராளர், ஆகமஸ்தர் : சூக்ஷ்ம நாடி மூலமாய்ச் சஞ்சரிப்பதால் அணுவே ஆத்துமா என்பர்.

திகம்பரர்: பாதாதி கேசமுதல் அறிவு வியாபித்திருப்பதால், புருஷ ரூபமே ஆத்துமா என்பர்.

தார்க்கீகர், பிரபாகரர்: ஆத்துமா கண்டமயிருந்தால் நசித்து விடுமாதலால், ஆத்துமா பரிபூரணமென்றும் சடமென்றும் புகல்வர்.

பாட்டர்: ஆத்துமா சுழுத்தியில் சடமாயும் சாக்கிரத்தில் அறிவாயுமிருப்பதால் சடசித்தெனப் புகல்வர்.

சாங்கியர்: பரிபூரணத்திற்கு இரண்டு லக்ஷணம் கூடாவாகையால், ஆத்துமா அறிவாயும் பரிபூரணனாயுமிருக்கும் சுழுத்தியில் காணப்படும் சடம் அந்தந்த ஆத்துமாக்களுக்குச் சுக துக்கத்தைக் கொடுப்பதால் ஆத்துமா சுபாவம் என்பர்.

யோகியர் : பிரகிருதி என்னும் சுபாவத்திற்கு நடத்துவோனில்லாவிடில் சேஷ்டியாதாகையாலும், ஆக்கினை செய்து காப்பாற்றுகிறவனில்லையாகில், சீவர்களுக்குப் பந்த மோக்ஷமில்லாமையாலும் ஈஸ்வரன் சீவர்களுக்கு அன்னியமாயிருக்கிறான் என்பர்.

பதஞ்சலி மதத்தார்: பிராணிகளின் மனத்தில் அந்தரியாமியாயிருப்பது ஆத்துமா என்பர்.

தார்க்கீகர்: அந்தக்கரணமில்லாவிட்டால், சங்கல்பமில்லை, ஆனபடியால் அந்தக்கரணமொற்றுமைப்பட்டபோது இரணிய கர்ப்பனாயிருப்பதே ஆத்துமா என்பர்.

விஸ்வ ரூபர்: தூலத்தை விட்டுச் சூழ்மமிராதாகையால் கிருஷ்ணன் விஸ்வ ரூபமெடுத்து எங்கும் காலைக் காட்டியபடியால் விராட்டு விஸ்வரூபமே ஆத்துமா என்பர்.

மதாபிமானிகள் கூறுவதில் உண்மை இன்னதென்று உணர்பவர்கள் ஞானிகள்.

உலகில் இவ்வகைப் பேதங்களாகப் புகல்வர்.

மோக்ஷம்

வேதாந்திகள்: ஆணவம், மாயை காமியம் இம்மும்மலங்களும் நீங்கி, ஆத்துமா அருளோடு கூடி நிற்பதே முத்தி: பிரமாத்துமா ஐக்கிய ஞானத்தால் விவகாராதி சமுசார பந்த நிவர்த்தியே மோக்ஷம் என்பார்கள்.

பாதஞ்சலிகர்: யோக அப்பியாச பலத்தால் மனோலயத்தால் அஞ்ஞானமழிந்ததே மோட்சம்என்பர்.

சாங்கியர்: பிரகிருதி புருஷ விவேகத்தால் அவித்தை நாசமானதே மோட்சம் என்பர்.

சங்கிராந்தவாதி பாலிகமா வாதி: பசு கரணம் கெட்டுச் சீவகரணமாகிறதே, காத்தருவமான சமுசாரபாவத்தை விட்டு ஞெப்திமாத்திரமாயிருப்பது மோட்சம் என்பர்.

பார்க்கரியன் பேதவாதி: ஆத்துமா கெடுகிறதென்று ஆணவமலம் கெடுகிறதே மோட்சம் என்பர்.

மாயா வாதியர்: சரீர தொந்தனையிட்டு நிற்கிற சீவாத்மாவிற்கு விவேக ஞானம் உண்டாகிறதே மோட்சம் என்பர்.

பிரபாகரன் அமணன்: எங்கு மரிந்த காமிய கன்மங்கெடுகிறதோ, முக்குணங்கள் கெடுகின்றனவோ. அங்கு மோட்சம் என்பர்.

புத்தர்: உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம் கெடுகிறதே மோட்சம் என்பர்.

சம வாதியர் : சுத்த மாயா சரீரமழியாதாகையால் நித்தியமாயிருப்பதே மோட்சம் என்பர்.

பாஷாண வாதியர்: ஆத்துமா கேவலத்தில் கிடக்கும் தன்மையைப் போல முத்திலும் ஒன்றுமறியாமலிருப்பதே மோட்சம் என்பர்.

சாத்துவிக சார்வாக லௌகீகர்: ஆனந்த பிராப்தி மரணமே மோட்ச என்பர்.

பூர்வமீமாங்கிசிகள்: உலகாயதர் மோட்சம் சுவர்க்காதி லோக பிராப்தி என்றும், மதிளிரிடத்துண்டான போகமென்றும் கூறுவார்கள்.

சைனர், கவுலயாழ்மளர்: மோட்சம் ஆகாசமத்தியத்துளுத்தி ரோத்ர கமனம், ஆகாசமனாதி சித்திபிராத்தி என்பர்.

பௌத்தர்: சுகதுக்காதிகளால் மயக்கப்படாமலிருக்கும் சுத்த புத்தி சித்தியே மோட்சம் என்பர்.

பாஞ்சராத்திரிகள்: வாசுதேவாத்துமாகப் பிரகிருதியில் சொரூப ஆனியில்லாமலடங்குவது மோட்சம் என்பர்.

இலௌகீகர்: இகத்தில் புத்திராதிகளுடன் கூடி வியாதி துக்கமில்லாமல் சுகத்திலிருப்பது மோட்சம் என்பர்.

நியாய வைசேடிகர்: ஆத்துமஞ்சரீரேந்திராதி 211 துக்க ஆத்யந்த நாசத்தால் பாஷாணம் போல இருப்பது மோட்சம் என்பர்.

பாசுபதர்: பிரவாகேஸ்வத்தால், ஈஸ்வரத்துவம் அன்னியிருக்குக் கொடுத்து ஆத்துமன் ஞெப்தி மாத்திரமிருப்பது மோட்சம் என்பர்.

மாந்திரசமிமாஞ்ஞா சித்தாதிகள் : ஆத்துமன் சடத்துவாதீத சீன சமானத்துமாவதே முத்தி எனப் புகல்வார்கள்.

மதி லக்கினாதி கன்மாதி மூவரும் நுட்பாகக் கலந்திருக்கில் நரை திரை நீங்கி நெடுநாளிலிருந்து மோட்சம், குரு கோபுராமிசம் பெற்று, கேந்திரத்தில் நிற்க, வெள்ளி  திரிகோணத்தில் பரவதாமிசம் பெற்று நிற்க, கடக லக்கினமானால் உகாந்தவரையிருப்பன். கடக லக்கினமாய் மதி குருவிருக்க, நேத்திரத்தில் வெள்ளி புதனிருக்க, மற்றவர் 3.6.11 ல் இருக்க, ஆயுளில் அளவில்லை. குரு சனி, ஒரு பாகைக்குள் கூடிப் பாக்கியத்திலிருக்க, மற்றவிடமாகிலும் இப்படியிருக்க நற்கோள் பார்க்கப் பானு உதயத்தில் பிறந்தவன் முனீஸ்வரனாவன், பாக்கியத்தில் புதன், குரு, ராகு, கூடி சனியங்கிசத்தை மேவிடாதிருந்து, தனது அங்கிசமேற மதியுதயத்திலிருக்க யுகாந்தகாலமிருப்பன். இராகு குசன் சனிசர அங்கிசத்தை மேவி, குரு வெள்ளி, ஸ்திர அங்கிசத்திருக்க, மற்றவர் உபய அங்கிசத்திலிருக்கும் ஆயுள் 1000, இலக்கினம் உபய ராசியாய், உபயத்தோன் கேந்திரமுச்சம் மூலதிரி கோணத்திருக்க சனி அட்டமாதி கூடில் 100, ஆயுள் இலக்கினாதிபதிக்கு 6- 8- ஆமிடத்தில் பாபக்கிரகம் நிற்க, ஒன்பதாமிடத்ததிபதியும் சுபாளும் 9- ஆமிடமில்லாதிருக்கில், பரதேசியாய்த் திரிவன் வாக்காதிபதியும் குருவும் கூடியிருந்தால், சாஸ்திர விசாரணையும் மந்திர உபதேசம் செய்யும் திறமுமாகும். அங்காரகர் சனி சூரியன் குஜன் இந்நால்வரும் இலக்கணத்திலிருக்க, திரிகோண கேந்திரங்களில் சுபர் இல்லாதிருந்தாலும் சன்னியாசிவன் குரு சந்திரன் சூரியன் இவரிலொருவர் இலக்கினத்திருக்க, அல்லது 10-ஆம் இடமிருக்கினும், சனி 12ல் இருக்கினும் சன்னியாசிவன், சுக்கிரன் பகை நீச்சம் பெற்று, அவருக்கு 5-9ல் பாபர் நின்று, இலக்கினத்தைச் சுபக்கிரகம் நோக்காதிருந்தால் முத்தி பெறுவன். 5-ஆம் இடத்ததிபன் இலக்கினத்திற்கு 9-ல் இருக்க அவர் ராகுவாகில் ஆகாய கமனமும், சந்திரனாகில், காந்தருவ சித்தியும், புதனாகில் அவிழ்தப் பிரயோக சித்தியும்,
குரு, சுக்கிரன், சனியாகில், பொன் வெள்ளி ரசவாத சித்தியுமாகும். இராகுகேது 2-ஆம் இடமிருக்கில் கல்வியுள்ளவன்; செவ்வாய் ஆட்சி உச்ச கேந்திரங்களில் இருக்கில் பெருந்தவசி; சிவமனோகர ஞானி, துலாத்தோர்க்கு வாசி மேவிட யோகம், மந்திரம், குளிகை, வாதம் காயசித்தியுமாகும். கன்னி, மீனம், மத்திம சித்தி, மேடம், தனுசு தாயைப் போற்றிச் சித்திகள் பெறுவர்.  செனன காலமானாலும் யோகம் பூசை செய்தாலும் மாதம் சிங்கம் சிலை கோல் மீனம், ரிஷபம், கடகம், சுறா, வாரம் குருமதி புகர் புந்தி, லக்கினம் மீனம் வில், துலாம், கன்னி, திதி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி தசமி, திரிதியை சதுர்த்தி, யோகம், அமுத யோகமாயிருக்கில் உத்தமம், ஞான சித்திராவர். செனன நாள் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி மூலம் உத்திராடம் அஸ்வனி பரணி உத்திரட்டாதி காய சித்தி யோக சித்தியாகும்.

கர்ப்பம் உண்ணத் தனது இலக்கினத்திற்குச் சாரத்தில் கிரகங்கள் சுக்கிரன் 5ல் குரு 9ல் குஜன் 2ல் புதன் 11ல், சூரியர், 7ல் சந்திரனிருக்க வேண்டும். கர்ப்பமென்பது முப்புவென்றும் அவரை ரவிமதி சுழி என்றும், பகிர் முகத்தில் தாது மூலசிவமாயுள்ளவையில் எப்பொருளாக அமைந்திருக்கும் முப்பைக் குரு தெளிந்து, அவை கொள்ளுவதற்கு முந்தி, லோக குருவாகிய அயக்காந்தச் செந்தூரத்தை அகத்தியர் செந்தூரம் 300ல் கூறியபடி கொள்ள வேண்டும். சந்திர கலையில் பிருதிவி பூதம் நடக்கும்போது சிவாலயம், வீடு கட்டல், குடி புகுதல், மரம் வைத்தல், சாந்தி கழித்தல், அப்புக்குக் குளமெடுத்தல், சோலை வைத்தல், விவாகம் செய்தல், உழவு விதை விதைத்தல், தேயு பிணி தீர்த்தல் வாயு குதிரை தேர் கப்பல் ஏறுதல், ஆகாயம் மந்திரம் சாதித்தல், பூரிய பிரிவு தெரியாவிடில் இடநாசிப் பக்கம் கலை சந்திரனாகையால், அப்படி நடக்கும்போது வஸ்திர ஆபரணம் பூணல் தூதனுப்பல், அடிமை கொள்ளல், விவாகம் செய்தல், கிணறு வெட்டல், குடி புகுதல், அரசரைக் காணல், சாந்தி தெய்வப் பிரதிஷ்டை செய்தல், சுரம் தீர்த்தல், சமாதானம் செய்தல், தனம் வைத்தல், வலநாசிச் சூரிய கலையில் உபதேசம் பெறல் வணங்கல், யுத்தம், வியாபாரம் சூது வழக்குரைத்தல், சவாரி செய்தல், சங்கீதம் பாடல் நித்திரை செய்தல், பிசாசு ஓட்டல், போஜனம் செய்தல் ஔடதம் புசித்தல், ஸ்நானம் செய்தல் உத்தமம்.

சத்தியாய்ச் சிவமாய்த் தாண்டவமாடும் நாசியாகும். சரீரத்தில் துடிபயன்: அடர்ந்த கை துடிக்கில் ஒரு வருடம் கால் 6 மாதம்; நெற்றி 3 மாதம் கன்னம், 10 நாள் ; காது கேளாவிடில் நாள் 7 ; பார்வை தெரியாவிடில் நாள் 5; வாசனை தெரியாவிடில் நாள் 3; நாக்குழறில், நாள் 2ல் மரணமெனக் கொள்க. வாயில் சலம் வைத்து நிழலில் இருந்து ரவியில் உமிழ அதில் இந்திர தனுசு பஞ்சவர்ணமாகத் தோன்றுமாகில், ஒரு வருடம் வரையில் மரணமில்லை; முறிந்திருக்கில், அந்த ஆண்டில் மரணம் நிறம் மாறிப் பெண்ணுருத் தோன்றில், 6 மாதத்தில் மரணமாவர், அமாவாசை ரவியிலாகிலும், பருவ சந்திரனிலாகிலும் உருக்கிய நெய்யைக் கிண்ணத்திலிட்டுப் பூமியில் வைத்து முன் கண்ட ரவி மதியில் ஒன்றைப் பார்க்க வெண்மை நிறமாகக் காணில் பிராண பயமில்லை; செம்மை, வாழ்வு, பொன்மை, கேடு, பசுமை, நோய், கருமை சாவு தென்புறம் வட்டம் குறைந்து காணில், ஒரு வருடம் மேற்புறம் குறைந்தால் 6 மாதம் வடபுறம் குறைந்தால் 3 மாதம்; நடுவே தொள்ளையாயிருக்கில், 10 நாளில் மரணமாம் விசேட பலனைச் சரநூலிற் பார்க்க.

வேதம் 4; உபவேதம் 4; அங்கம் 6 உபநிஷத்து 23; ஸ்மிருதி 19; சிவபுராணம் 10; விஷ்ணு புராணம் 4; பிரம புராணம் 2; சூரிய புராணம் 1; அக்கினி புராணம். 1; உபபுராணம் 18. இதிகாச ராமாயண பாரத பாகவத வாசிஷ்ட பகவத் கீதை, பிரபந்த தேவாரஞான நூல்  சித்தர் வாக்கியங்கள் இன்னமனேகமாயுள்ள கிரந்தங்களும்  குர் ஆன் பைபிள் முதலியனவும், கடவுள் ஒன்றெனத் தெளிந்து விகற்பமற்று அண்டாகாரப் பொருளில் இயலமுறும்பொருட்டேயன்றி வேறில்லை. நீர் நுழையாவிடம்  நெய் செல்லும்; நெய் செல்லாவிடம் புகை செல்லும் புகை  செல்லாவிடம் மனம் செல்லும் மனம் செல்லாவிடம் அறிவு செல்லக்கூடும்.

ரவி நிழல் அல்லது மதி பிரகாசத்தில் தனது நிழல் பூமியில் தனது உருவ அளவாயிருக்கும்போது அந்த நிழலைத் தனது நேத்திரம் இமையாமல் பார்த்துக் களங்கமில்லா ஆகாயத்தை பார்க்கில் தனது உருவம் பெரியதாய்த் தோற்றும் அது பொன்னிறமாகில் செல்வம், வெண்மை ஆயுள் வளரும்; செம்மை ஆயுள் குறையும்; கருமை இனி நலி அவ்வுருவில் கைகால் தோன்றாவாகில் 6 மாதத்தில் மரணம், தலை தோன்றாமலிருந்தால் 3 மாதத்தில் மரணம் இந்தச் சாயை வடிவமானது தனது மனமும் நேத்திரமும் ஒற்றுமையாய்த் தோற்றமாயிற்று, சாயை மறையாதோ தன்னுடம்பு தம் வெளிக்குள் ஓய அகத்தினிடை ஓடாதோ? என்று கூறியபடி கண்ணும் கருத்தும் ஒற்றுமை செய்த அகநோக்குடையவர்கள் இருந்தபடி சராசரங்களின் இயல்பையும் மூன்று கால வாத்தமானங்களையும் தெரிந்து கொள்ளக்கூடும். சாயை தீப பிரகாசமிருப்பது தெரிந்த விஷயம் அஃது யாதென்று கவனிப்பதில்லை; அஃது எங்கும் நிறைந்தது என்பது தெரியாமையால் சிலருக்குச் சங்கை தரும். ஒரு வீட்டில் நால்வராகக் கூடி, அந்த வீட்டில் ஒரு பொருளையானாலும் ஒரு கட்டடத்தையானாலும் நால்வரும் நினைந்து கொண்டு தாம் நினைந்த சங்கதியறியாத ஒருவன் நேரத்தைத் துணியால் மூடி, அவன் தோள்மீது நினைக்க நால்வர் கையும் வைத்து, அவன் இஷ்டப்படி போகும்படி சொன்னால், அவ்விடம் விட்டு நால்வர் குறித்த இடமே போய் நிற்பான்; குறித்ததைத் தன் கையால் தொடுவான் இதன்றியும் ஒருவனை நமது சுவாசம் உள் செல்லும்போது நினைந்தால் அதே சமயம் அவன் நம்மை நினைக்கின்றான். எதிரிலிருக்கும் ஒருவனுக்கு நடக்கும் கலையும் அதிற் பூதியமும் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நமது கலையைப் பார்த்தால், அப்போது கலையும் பூதியமும் நின்று எதிர்க்கு நடக்கும் கலையும் பூதியமும் நடந்து தெரிவித்து உடனே முன் நமக்கு நடந்ததுபோல நடக்கும், கடவுள் எங்கும் வியாபகராயிருப்பதற்கு இன்னுமனேக திருஷ்டாந்தங்கள் இருக்கின்றன. அனேக சமய வாதிகள் பேதா பேதங்களாய் எங்கள் சாமி உயர்ந்தவர்; உங்கள் சாமி தாழ்ந்தவர்; என்று தாகிப்பது சரியன்று, பார்க்குமிடத்து, பூமி, ஆகாயம் சந்திரர், சூரியர், இடி, மின்னல். மேகமிவைகளும், மத்தியில் உலவும் வாயுவும் யாவருக்கும், மேகமிவைகளும், மத்தியில் உலவும் வாயுவும் யாவருக்கும் பொதுவாயிருக்க, நூல் விசாரணையும் நல்லோர் பழக்கமும் அவர்களால் பெற்று அடையவேண்டிய பயனுமடையச் சக்தியில்லாதவர் கூறும், வீண் வாதமாய் இருக்கின்றன. எம்மதச் சார்பிலுதித்தவராகிலும்,  எதிரிட்டிருக்கும் மரண பயத்திற்கஞ்சித் திகிலடைந்து, உலகில் சத்து இன்னதென்றுணர்ந்து சதா எதை நாடி நிற்க வேண்டுமோ அதில் நின்று முடிவு பெறுவதே மானிடமாகும். சிவம், விஷ்ணு, அல்லா, பராபரன் என்பன அவரவர்கள் சார்பின்படி கடவுள் நாமம் அனேகமாய்ப் புகன்றாலும், அப்படிப் புகலும் வஸ்து யாது? அதை இன்னதென்றுணர்ந்தால் எம்மதச் சார்பிருந்தாலும் கடவுள் ஒன்று எனத்தெளிந்து பேரறிவாளரென யாவராலும் புகழப்படுவர். மாயையின் கூறாகிய அசத்து சடம், துக்கம், அனித்தியம் கண்டமிவைகளை நீக்கி, சிவத்தின் கூறாகிய சத்து, சித்து, ஆனந்தம், நித்தியம், பூரணமாகிய இவ்வைந்தின் தாத்பரியங்களையுணர்ந்தவர் இந்நூற்குரியவராவர்.

சாதிகுலம் பிறப்பிறப்புப் பந்தமுத்தி அருவுருவத் தன்மை நாமம்
ஏதுமின்றி யெப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவற்றின் றியக்கஞ் செய்யுஞ்
சோதியைமாத் தூவெளியை மனதவிழ நிறைவான துரிய வாழ்வைத்
தீதிலபர மாம்பொருளைத் திருவருளே நினைவாகச் சிந்தை செய்வோம்.

சரியை கிரியை யோக ஞானமாகிய நான்கு பக்குவர்களும் மோக்ஷமாகிய முத்தியடைய வேண்டும் என்பதே கருத்து, அதிலும் சரியை கிரியையுடையவர் இப்பிறவியிலாகிலும் அல்லது மறுபிறவி மானிடமாகத் தோன்றியாகிலும் அதிக இகபோக சுகங்களையடைய வேணுமென்ற ஆவல் பூண்டவர்களாகவும் இருக்கின்றனர். எவரெவர் உண்மையாக எந்தவித பாவனையும் கோரிக்கையுமாயிருந்து வருகிறார்களோ, அவற்றிலே ஆத்துமா தேகத்தைவிட்டு நீங்கும்போது எண்ணம் உதிக்குமென்று, கோரிக்கைப்படி சென்னமும் இச்சுகமும் பெற்று அனுபவிக்க வேண்டுமென்று ஆகமநூல் கூறுகின்றன. யோகவான், ஞானி இவர்கள் முடிவு பெறும்போது 96 தத்துவங்களும் ஒன்றிலொன்று ஐக்கியமாய், அவைகளுக்கு ஆதாரமாயும் அணுவுக்கணுவாயுமிருந்த ஆன்மா தேகத்தை விட்டு மகாகாயத்தில் இலயமாவதும் அல்லது அத்தேகத்தில் தானே ஐக்கியமாவதும் நமது சிற்றறிவிற்கு விளங்காது அல்லது வினைக்கிடாய் வேறு பிறவி எடுப்பதற்கு எவ்வகையாக ஒரு புருடன் சுக்கிலத்தில் அணுகினவன் ஆத்மா சீவனென்பது போய்ச் சம்பந்தமுற்றதும், உண்மை, இவ்வாறென் அறிந்தால் மாத்திரம் நரக மோக்ஷம் உண்மை என்பதும், அனேக பிறவிகளெடுத்து அவற்றின் புண்ணிய பலத்தால் மானிடம் பெறுவதும் கைலாய வைகுந்த பரமபதமிடமும், எமலோக நரகமிடமும் கால தூதரும் நன்றாக விளங்கும். ஆகையால் கால தாமதம் செய்து உலக வியாபாரப் பெருந்திரை இலாழாமல் மனத்தை ஒருவாறாக நிறுத்தி நூல், விசாரணையும் சாதுக்கள் சங்கமும் பெற்று, நீரதிசயானந்தப் பேரானந்த சுகம்பெற நன்னிலை பெறுங்கால் மேற்கண்ட சங்கைகள் நிவர்த்தியாகும் சுக்கில சுரோணித் சம்பந்த காலம் அமைந்தபடி சென்னமெடுத்தும் மரணமாகும் வரையில் அனுபவிக்க வேண்டியதிருக்க நாம் மத்தியில் என்ன முயற்சி செய்தாலும் யாதும் பயன்படாது என்று சிலர் புகல்வர் அவ்வகை கருதுவது நமது அக்கியானம் அனுபவிக்க வேண்டுவதை அனுபவிக்க வேண்டுவதானாலும் கடவுள் சிந்தை சதா உடையவர்ளாகிய பரஇச்சா பிராரத்துவமாகச் சகல சுபங்களையும் கடவுளளித்து  ரக்ஷிப்பர், வலக்கையை முகத்து நாசிக்கு நேராக நிறுத்தி இரண்டு கண்ணினாலும் கைந்நாடி துடிக்குமிடத்தில் இமை ஆடாமல் பார்க்கக் கை சிறிய துரும்பு கனமாகத் தோற்றும். அப்படித் தோன்றுமாகில் 6 மாதவரை மரணமில்லை; அல்லது கைப்பிரமாணமாகவே! தோன்றுமாகில் சீக்கிரம் மரணமென்றறிக. முன் கண்ட பார்வையாகப் பார்த்து கை சிறியதாகத் தோன்றிப் பின்பு இருளாகத் தோன்றும். அவையும் நீங்கித் தீப்பிரகாசமாக வெளிச்சமுண்டாகும். அப்படித் தோன்றிய பிறகு அப்படிச் செய்யும் அப்யாசிகள், அந்தப் பிரகாசத்தில் அனேக அற்புதங்களைக் காணுவதுண்டு, பிந்தச் சாதகமாகச் சிலகாலஞ் செய்தவர்களுக்கு விளங்கும் நிழலுள்ள தாழ்வாரத்தில் வெளியாயிருக்குமிடத்தில் உட்கார்ந்து கொண்டு, முகம் பார்க்கும் கண்ணாடியை வலக்கையிலெடுத்து தனது முகத்தின் வல நேத்திரக் கருமணியில் விளங்கும் வடிவைக் கண்ணிமையாடாமலும் மனம் வேறு வழி செல்லாமலும் பார்த்திருந்த கண்ணில் இருந்து சலம் வடியும். அதற்கும் இமையாமல்  பார்க்க இருளாகத் தோன்றும். அந்த இருளை அசைவறப்பார்த்திருக்க வெளி தோன்றும். அந்த வெளியினிடத்திலும் அனேக அற்புதங்களை அனுபவிகள் காண்பார்கள். உலகில்அஞ்சனமென்னும் கறுப்பு நிறமுள்ள மையைக் கையில் பொட்டுப் போல வைத்து, தீப முன்னிலையில் கண்ணிமையாடாமல் மையைப் பார்த்து, அதில் அனேக தேவதைகளைக் கண்டதாயும். தாங்கள் கோரிய இடம் பொருள் இவைகள் தெரிந்ததாயும் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம். சத்த பரிச ரூப ரச கந்தமாகிய ஐந்தும் கூடியது அஞ்சனம், இதைப் பார்க்குமிடத்துக் கண்ணாரமுதமாய், விளக்கொளியாய் நின்றானை என்று கூறிய வாக்கியம் உண்மையாக விளங்குகிறது. மகான்கள் உரைத்த லக்ஷியங்களைப் பரிபாக பக்குவப்படிக்குத்  சாதித்து அவைகளினால் முடிவு பெறும் பயனைத் தேகம் பிணமென்று புகலாமுன் அனுபவ முதிர்ந்து நிரதிசயானந்த நிர்விகல்பமாய் ஜீவன் முத்தனாக மனம் வாக்குக் காயத்தால் மகான்களைப் போற்றுவதே நமது கருத்தாகும்.

உலகில் நால்வகை யோனியுண்டு,அவை பையினிடம் முட்டையிடம். வியர்வை, வெப்பம், வித்துக்களால் உற்பவம். அவற்றில் 84 லக்ஷ பேதமாவன; தேவர் 14; மானிடம் 9; மிருகங்கள் 10; ஊர்வன (சாம்ப வகை) 11. நீர் வாழும் பிறவிகள்  10. தாவரம் 20; பாதாள ராக்ஷஸ யோனி 10; ஆக 84 லக்ஷ பேதமெனச் சாஸ்திரம் கூறும்.

பூதம் 5: பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம்.

பொறி 5: சுரோத்திரம் தொக்கு, சட்சு; சிங்குவை, ஆக்கிராணம்

தொழில் 5: தேவ, தானம், விசர்க்கம் ஆனந்தம், பயம்.

கோசம் 5: அன்ன மயம், பிராண மயம், மனோமயம் விக்கியான மயம், ஆனந்த மயம்.

சயம் 5: அமர சயம், பக்குவாசயம் மலசயம் சலசயம் சுக்கில சயம்.

புலன் 5: சத்தம, பரிசம், ரூபம், ரசம், கந்தம்.

கரணம் 4: மனம், புத்தி, சித்தம், அகங்காரம்

குணம் 3: சாத்துவிகம் இராசதம் தாமதம்.

மலம், 3: ஆணவம், மாய்கை, காமியம்

தன்மேந்திரியம் 5 : வாக்கு பாதம் பாணி பாயுரு உபத்தும்

இராகம் 8: காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாறசரியம் இடும்பை வேகம்.

நாடி 10: இடைகலை, பிங்கலை, சுழுமுனை, சிங்குவை, புருடன், காந்தாரி, அக்கினி, அலம்புவி, சங்குனி குணா,

ஆதாரம் 6: மூலாதாரம் சுவாதிட்டானம், மணிபூரகம் அனாகதம், விசுத்தி, ஆக்கினை.

மண்டலம் 3: அக்கினி மண்டலம் ஆதித்த மண்டலம் சந்திர மண்டலம்

அவத்தை 5: சாக்கிரம்,  சொப்பனம், சுழுத்தி, துரியம் அதிதுரியம்

தோஷம் 3: வாதம், பித்தம், சிலேத்துமம்.

ஏஷணை 3: அர்த்த ஏஷணை, புத்திர ஏஷணை, லோக ஏவுணை,

வாயுக்கள் 10: பிராணன் ஆபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருதரன், தேவதத்தன் தனஞ்சயன்.

வினை 2: நல்வினை தீவினை.

அறிவு 1:

கைலாய வர்க்க வேடம் : 6 முகமுள்ள 16 ருத்தராக்ஷ சபமாலை மணி விரல் 36 கொண்ட யோக தண்டு. பரி செம்பு1 4.16 மஞ்சாடியுள்ள குண்டலம், 96 அங்குலமுள்ள யோக வேட்டி, 4 அங்குலமுள்ள கவுபீனம் புவி அதளாசனம் இரசலிங்கக்கடகம் உப்புமணி.

திருமூல வர்க்க வேடம்: சபைப் பிரம்பு 5 பட்டை உப்பு கதை படிக மணி யோக வேட்டி, படிகலிங்கம் காதில் செம்புருட்டு, புத்தகம் ருத்திராக்ஷம் பாதக்குறடு, புலித்தோல் .

ஆசனங்கள் : மான் தோல் ஞானம் புலித்தோல் செல்வமும் தர்ப்பாசனம் மோக்ஷம் சித்திரக்கம்பளம் நன்மை வஸ்திரம் தீமை நீங்கல்.

உடலுக்குள் நீர்நின் றுலாவினதைக் காணாமல்
கடமலைதோ றுந்திரிந்து காலலுத்தேன் பூரணமே!
நானே நீ நீயேநான் நாமிரண்டு மொன்றானால்
தேனின் ருசியதுபோல் தெவிட்டாய்நீ பூரணமே!
கண் காணி யில்லென்று கள்ளம் பலசெய்வார்
கண் காணி யில்லாவிடமில்லை காணுங்கால்
கண் காணி யாகக் கலந்தெங்கு நின்றானைக்
கண் காணி கண்டார் களவொழிந் தாரே?

இவ்வனுபவம் பெறுபவர்கள் மெய்ஞ்ஞானிகள்.

மந்திர மென்னும் மனத்திர தியானத்தால் பிணி முதலியவை நீங்க வாயில் செபியாமல் மனத்தால் தியானிப்பது சித்தர்கள் வாக்கியம் சகல வியாதிகளும் நீங்க மஞ்சளால் கணபதி வைத்து அறுகு புட்பம் சார்த்தி தாம்பூலம் தேங்காய் பழம் தூபதீபம் செய்து நேத்திரப் பார்வையைப் புருவ மையம் வைத்து இடக்கையில் விபூதியைப் பரப்பி அதில் பிரணவமெழுகி அம் சிங்கிலி என்று தியானம் ஆயிரத்தெட்டுச் செய்து விபூதியை நோயாளியை உட்கொள்ளும்படி கொடுத்து வர நோயும் தீரும் பிசாகம் போகும்.

காப்ப நோய் தீர்ந்து கர்ப்பமாகத் தேனும் முலைப்பாலும் கூட்டி ஓம் சிறி சிசு என்று 18 தரம் தியானித்து பெண்களை உட்கொள்ளச் செய்க.

பிரசவ கால நோய்க்கு வெண்ணெய் டங் டம் என்று தியானித்து வயிற்றில் பூசப் பிரசவமாகும்.

சிலந்தி கட்டிகள் உடையவும்  வீக்கம் வாடவும் வெண்ணெயை உம், வங், தம் , ஓங், றீங் , நசி, மசி என்றாகிலும் அல்லது உம். வங், தம் என்றாகிலும் தியானித்துத் தடவி விபூதி உள்ளுக்குக் கொடுக்கவும்.

கண் புகைச்சல் மாலைக்கண் சூடு, குத்தல், சதைப்படலம், தீர ஒரு பாத்திரத்தில் சலத்தைவிட்டு அதைக் கையில் வைத்துக் கொண்டு லா, லு, லீ, என்று தியானித்து அந்தச் சலத்தினால் கண்ணைக் கழுவி வரச் செய்யவும்.

விஷமிறங்க சலத்தை ஓம், கிலி, நசி, நசி என்று 108 தியானித்து சலத்தை உள்ளுக்குக் கொடுக்கவும்.

சகல பாபமும் நிவர்த்தியாக ஓம், றங், றீம், யநம, சிவ சகல; பாப நிவராணீயாமி என்றோதவும்.

ஓங்கார கம்பம்: என்பது உணர்வெழுத்தாகச் சப்திப்பது தேவியாகும் இருண்டவன் கண்ணுக்கு மருண்டது பேய் எனப் புகல்வது போல அக்கியானத்தால் பேய் பிசாசு காட்டேரி சாமுண்டி துர்க்கி காளி முனி அனுமார் வீரபத்திரன் முதலிய நாமங்களுடையவைகளிருப்பதாயும்  அவற்றை மந்திரங்களால் உருவேற்றி வசியம் செய்து கொண்டு அதனால் இக அஷ்டகர்மங்களை நடத்துவதாகவும் மந்திரவாதிகள் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். அவை முடிவாகப் பார்க்குமிடத்து அவரவர் கற்ற நூலளவும்  விசாரணையும் எவ்வளவு மனத்திடம் நிச்சயப்பட்டிருக்கிறதோ அவர்கள் பாவப்படி கடவுள் எங்கும் நிறைந்தவராதலால் கோரியவண்ணம் தோற்றிப்பலனளிக்கக்கூடியே விளங்குகின்றன. பாவமும் தோற்றமும் அழிவும் வருமெனவும் நிறைந்த பரிபூரணம் முடிவென்றும் வேதமும் அனுபவிகளும் கூறுவர். சிரசையாட்டிச் சரீரமசைத்து நடக்கையாலும் மல்லாந்து மார்மீது  கை வைத்தும் புரண்டு  புரண்டும் இரு கரத்தையும் தொடைக்குள் வைத்தும் நெடுமூச்சு விட்டுப் படுக்கையாலும் மலச்சல மடக்கலாலும் மனவேகத்தாலும் இராசத் தாமத உணர்வினாலும் வியாதிகளுற்பவமும்  சொப்பானாதி அவஸ்தையும் நேரும்.

ஈரா றேபார் சமாதிதனி லியங்கி நடக்கி லீரெட்டாம்;
மாரா தோடில் ஐயைந்தாம்! மருவித் துயில லவ்வாறாம்;
காரார் குழலா ருடன் கூடிக் கலவி கழித்தலெட்டெட்டாம்
நேரே நோக்கி நிலைநிறுத்த நிற்குஞ் சிவமு மதுதானே.

நெடிதான் தாரையொன்று சங்கி ரண்டு
நின்றூதும்  திருக்கோவி லறையி னுள்ளே

வடிவாக ஒரு பாதம் ஆடி நிற்கும்
மற்றொருகால தூக்கிநின்ற சிவனைக் கண்டோர்

கடிதாக உடல்வெறுத்துத் தவங்கள் செய்து
கண்மூடிப் பூசித்துக் கலங்கு வாரோ?

படிமீதில் திருக்கோவில் நதிகள் தேடிப்
பரிதவித்தே யுழல்வதென்ன பகர்ந்தி டீரே.

உருத்த ரித்த நாடி தன்னி லோடுகின்ற வாயுவைக்
கருத்தி னாலி ருத்தியே கபால மேத்த வல்லரேல்

விருத்த ராரும் பால ராவா மேனியுஞ் சிவந்திடும்
அருட்டரித்த அம்மை யானை அப்பனானை யுண்மையே

பொய்யென்று சாத்திரத்தைச் சொல்வா னாகில்
புழுவான பாழ்நரகில் வீழ்வான் பாவி;

மெய்யென்று குருபதத்தைத் தொண்டு பண்ணி
வேதாந்தப் பலநூலும் விரித்துப் பார்த்துக்

கைமுறையும் குருமுகமாய்க் கண்டு நேறிக்
கற்றவரை வணங்கியே சொல்லக் கேட்டுப்

பொய்மறந்து மெய்யுகந்த அறிவிற் கூடிப்
பூரணமே தெய்வமென்று போற்றி நிலவே.

ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவே யொன்றாம்
ஆனாலும் பேதை குணம் பெண்ணுக் குண்டு;

வீணுக்கே எடுத்த சன்மம் அனந்தலங் கோடி
விவேகமுத்தி யடைந்தவர்கள் அதிக முண்டு;

ஊனுக்குத் தேடியுண்டே யுறங்கிச் செத்த
உலுத் தருண்டு புருடரிலே அனந்தங் கோடி;

தானுக்கே ஏகசரா சரந்தான் நெஞ்சே!
சற்குருவின் சொற்படியே சார்ந்து பாரே.

பேதைமை யென்பது மாதாக்கணிகலம் மாதர்கள் மனம் கேவலத்தில் எக்காலமும் செல்லும். அநேகமாய்க் கூடிய பாவங்கள் திரண்டு பெண் வடிவமாக ஜனிப்பதென்று அகஸ்தியர் செப்பியிருக்கின்றனர்.

முத்தரையும் பெத்தரையும் முகக் குறியான்
நகக்குறியான முழுதுந் தேறின

மெத்தனவா கியமொழியும் ஆனந்தப்
பரவசத்தான் மிகுந்த் சோர்வுஞ்

சித்தநிலை தெரியாத செல்வமுமா
யிருப்பர் நல்லோர் தீயோ ரெல்லாம்

இத்தகைமை யோர்களையும் இகழ்ந்து புகழ்ந்
தோர்க்குறவா யிருப்பர் தாமே.

போகாம லிருக்கவென்றா லசான் தன்னைப்
பொற்பூவைச் சாத்தியல்லோ காக்க வேண்டுமா?

வேகாத தலையல்லோ முன்னே கேளு;
விளம்பியபின் சாகாலை விரும்பிக் கேளு;

வாகாக வாதவித்தை கண்டார்க் கையா!
வலது முழந் தாழிலொரு மறுவைப் பாரு;

ஆகமுடன் கண்டமது சாய்வு காணும்
அப்பனே! இன்னமுரு வங்கங் கேளே;

கேளப்பா இடமுதுகில் மறுத்தான் காணும்;
கெடியான் இடக்கையில் சங்கு சகரம்

நாளப்பா இக்குறியை நன்றாய்ப் பாரு;
நாசியிட நாசியிலே மறுவைப் பாரு:

வேளப்பா இடமுதுகில் மறுவைப் பாரு:
வேதாந்த வாதியெனிக் குறியே பாரு:

ஆளப்பா இப்படியே அடையா ளங்கள்
ஆறையும் நீ கண்டவரை யடுத்துக் காணே

நெற்றியில் சூல ரேகையுமிருக்கும்.

மாணாக்கருக்கு உபநயன, சந்தியா வந்தனம், உபதேசம் காயத்திரி ஜபதப முதலியவைகளை ஆசிரியராகும் குரு செய்து வைக்கின்றனர்.

வேதமென்ற ஆகமங்க ளாறு சாதரம்
வெவ்வேறு மதபேதம் சமய பேதம்

காதமென்ற காதியும்நால் பதினெட் டாகக்
கவுத்துமா யுலகோரை மயக்கங் காட்டிக்

கீதமென்றோ லரிகீதம் சிவகீத மென்றும்
கிருபையுடன் வெவ்வேறாய்ப் பிரித்துக் காட்டிப்

பாதமென்று சாவதுவே நிசந்தா னென்று
பாடினார் சாத்திரத்தைப் பாடி னாரே!

என வியாசர் கூறியதாக அகஸ்தியர் கூறியிருக்கின்றனர்.

உபநயனமென்பது மூன்றாவது நேத்திரம். அறிவு உணர்வு, அதனால் சந்தியா வந்தனமென்பது இரவி மதிதனதிடம் ஒற்றுமையாகும் காலம், உபதேசமாவது பகீர்மும் நோக்கு, நீங்கி, ஞான தேகமாகிய அகமுக சுத்த வெளியிடமிருந்து சப்தப்ங்களைச் செய்விக்க குரு திருவருள் புரிவது.

வசிஷ்டர் இராமமூர்த்திக்கருளிய நிலை:

ஆதலா லுயிரசைவால் வாத னைப்பால்
அமுத்தத்தா லறிவைவிரி வாக்கா யென்னில்

ஓதுபிறப் பறுமறிவின் விரிவே யுள்ளம்
உள்ளத்தா லிவ்வனந்த வுயிர்கள் வாழ்வாம்.

சேதனயோ கிகளெல்லாம் பிராணா யாமம்
தியானமருந் தூகத்தின் திறங்க ளாலே

பேதன மொடுங்குவது பொருட்டா யன்றோ
பிராணவா யுவைநிறுத்திப் பிடிக்கின்றாரே!

உண்டாகி எவ்விடத்தும் உற்ற போதும்
உயிரசைவால் உணர்வுறும்ப போதந் தன்னை

மண்டமாற் றடுக்கைபெரு நன்மை யாகும்;
வளர்போதங் காண்பவற்றை மருவு மாலால்

தண்டாமாற் காண்பவையே மனத்துக் கென்றுந்
தவிராத துயராமத் தனிப்போ தந்தான்:

மிண்டாத சுழுத்தியிற்போ தம்போல் நிற்கில்
வீடதுபே றதுவிமல் பதம்வே றில்லை

தாயுமான சுவாமிகள்

கருவிகரணங்களொய்ந்த தொண்டர்களிடத்திலே நீ வீற்றிருப்பவன் என்றதும்

அதுவென்றால் எதுவெனவான் றடுக்குஞ் சங்கை;
ஆதலினால் அதுவென்லும் அறவே விட்டு

மதுவுண்ட வண்டெனவுஞ் சனக னாதி
மன்னவர்கள் சுகர்முதலோர் வாழ்ந்தா ரென்றும்

பதியிந்த நிலையெனவும் என்னை யாண்ட
படிக்குநிருவி கற்பத்தாற் பரமா னந்தக்

கதிகண்டு கொள்ளவுநின் னருள் கூரிந்தக்
கதியன்றி யுறங்கேன் மேற் கருமப் பாரேன்

என்றதும் உண்மை வாக்கியம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s