ஆதிநாதர் என்ற வேதாந்தச் சித்தர் பாடல்

Posted on Updated on

இவருடைய இயற்பெயர் ‘ஆதி நாதர்’ என்பது. வேதங்களின் முடிவை
உபநிடதங்கள் என்பர். அந்த உபநிடதங்கள் பல. ஒரு சிலவே வாழ்வின்
உண்மையை உணர்த்துவன. இவர் வடமொழியை அறிந்தவர். ஆதலின்
உபநிடதக் கருத்துகளை தம் 32 பாடல்களில் முத்தாக அமைத்துள்ளார்.
அவை கிளிக்கண்ணி மெட்டுடையனவாகும்.

கண்ணிகள்

ஆதிமத் யாந்தமதைக்
அன்பாய் அறிவதற்குச்
சோதிச் சுடரொளியைச்
தோத்திரம் செய்துகொள்ளே.
கிளியே

கிளியே

1
வாசாம கோசரத்தின்
மார்க்கம் அறிந்துகொண்டு
நேசாவனுபவத்தில்
நின்று தெளிவாயே.
கிளியே

கிளியே

2
அசல மூலமதிற்
அந்தம் அறிவாயோ
விசன மற்றவிடம்
மேவித் தெளிந்துகொள்ளே.
கிளியே

கிளியே

3
சுத்தபிர மத்தில் ஏகில்கிளியே
தோன்றிய சத்திதன்னில்
கிளியே
வித்தாரம் உண்டான
விபரம் அறிந்துகொள்ளே.
கிளியே
4
சத்தாதி வாக்காதி
தனுகர ணங்கட்கெல்லாம்
வித்தான மூலமதைக்
மேவித் தெளிந்துகொள்ளே.
கிளியே

கிளியே

5
சத்தியில் உண்டான
சதாசிவ மானதென்று
நித்தியம் நீ அறிந்து
நின்று தெளிவாயே.
கிளியே

கிளியே

6
அச்சிவ மானதிலே
அண்டபிண் டங்களெல்லாம்
உச்சித மாய் உதித்தே
உண்மை அறிந்துகொள்ளே.
கிளியே

கிளியே

7
நாலு வகையோனி
ஏழுவகைத் தோற்றத்
தாலு மகரசரம்
தத்துவம் உற்றதடி.
கிளியே

கிளியே

8
அகாரம் உகாரம் ரெண்டும்
யகாரம் உருவாச்சு
சிகாரம் வந்தவிதம்
தேறித் தெளிவாயே.
கிளியே

கிளியே

9
சத்துச்சித் தானந்தம்
தத்துவஞ் சொல்லுகிறேன்
நித்தியா னந்தமதை
வித்தாரம் செய்யுகிறேன்.
கிளியே

கிளியே

10
சாமி அருள்வேணும்
சாதனை நால்வேணும்
வாமி தயைவேணும்
வத்தவனாக வேணும்.
கிளியே

கிளியே

11
அஞ்சு புஞ்சகோசம்
ஆராய்ந்து பார்க்கவேணும்
நெஞ்சந்தெளிய வேணும்
நீயேநா னாகவேணும்.
கிளியே

கிளியே

12
ஆசாபா சங்களையே
லேசமும் எண்ணாதே
வாசனை மூன்றினாலே
மோசமும் போகாதே.
கிளியே

கிளியே

13
மானாபி மானமற்று
தானென்று அகமும்அற்று
நானப்பிர பஞ்சமற்று
நாதமயத் தைப்பற்ற
கிளியே

கிளியே

14
பத்தரை மாற்றுத்தங்கம்
சுத்த வெளியாகும்
எத்திசை பார்த்தாலும்
தத்துவ மாயிருக்கும்.
கிளியே

கிளியே

15
மூலா தாரமுண்டு
முக்கோண வட்டமுண்டு
வாலை கணேசனுண்டு
வல்லபை சத்தியுண்டு.
கிளியே

கிளியே

16
சுவாதிட் டானமுண்டு
சுத்தபிரமாவுமுண்டு
உவாதினி வாதிக்கெல்லாம்
உற்றவர் கண்டுகொள்ளே.
கிளியே

கிளியே

17
மேலே மணிபூரகம்
விட்டுணுக் குற்றவிடம்
காலா தீதத்துக்கும்
கருத்த ரவர்தாமே.
கிளியே

கிளியே

18
பாரு மனாகிதத்தில்
பார்வதி நாதரங்கே
கிளியே
சேருந் தலம் இதென்று
தெரிசித்துக் கொள்வாயே.
கிளியே
19
கண்டம் விசுத்தியல்லோ
கஞ்சம் பதினாறு
அண்டபிண் டங்களெல்லாம்
ஆஞ்ஞை மகேசனுக்கு.
கிளியே

கிளியே

20
இரண்டு கண்நடுவே
இருக்கும் மயேசுரனை
திரண்ட சிந்தையினால்
தேறித் தெளிந்துகொள்ளே.
கிளியே

கிளியே

21
ஆயிரத்து எட்டிதழில்
அமர்ந்த சதாசிவத்தை
நேயம தாகவேதான்
நிதம்பணிந்து ஏற்றிக்கொள்ளே.
கிளியே

கிளியே

22
ஈதோர் குணமாச்சு
இரண்டாம் குணந்தனையும்
மூதோர் மொழியெனவே
முற்றிலும் எண்ணுவையே.
கிளியே

கிளியே

23
சாதனம் நாலுவகை
சற்று நிதானமாய்
போத மிகுதியினால்
புத்திஎன் றேஉணர்வாய்.
கிளியே

கிளியே

24
சமாதி ஆறுகுணம்
சாமா வகய மலவே
உமாம கேசனுக்கே
உற்றதுஎன்றே தெளிவாய்.
கிளியே

கிளியே

25
உற்ற சமந்தானும்
ஒன்றிவைக் கும்பின்னும்
மற்றுள தமகுணத்தை
மாற்றல் அரிதலவே.
கிளியே

கிளியே

26
விடல் சகித்தல்தனை
மேன்மைய தாகக்கொண்டு
தொடர்ச மாதானம்
தொந்தம் நமக்காமே.
கிளியே

கிளியே

27
சிரத்தை எப்பொருட்டும்
தீவிரம் ஆகுமதே
பரத்தை தானடைய
பற்றொன்றும் இல்லைகண்டாய்.
கிளியே

கிளியே

28
பத்தியை விட்டுவிட்டுக்
பாவனையைக் கடந்து
அத்துவி தானத்தைக்
அனுபவித்து உய்வாயே.
கிளியே

கிளியே

29
பெண்ணாசை பொன்னாசை
பூமியின் மீதாசை
மண்ணாசை எண்ணாதே
வாசிஎன் னால்அறியே
கிளியே

கிளியே

30
தேகம் தேகிரெண்டு
தேகம்பொய் தேகிமெய்யே
மோகாந்தம் விட்டாக்கால்
முத்தி யடைவாயே.
கிளியே

கிளியே

31
பாவ அபானமற்று
பரத்தினுடன் பொருந்திச்
சுவானுப வந்தனிலே
சொக்கிநீ வாழ்வாயே.
கிளியே

கிளியே

32

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s