home

சித்தர்கள் “சித்தர்” என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.

11113984_458417647670365_2724052849441926564_n.jpg

எட்டு வகையான யோகாங்கம் அல்லது அட்டாங்க யோகம் :

  • இயமம் – கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.
  • நியமம் – நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்.
  • ஆசனம் – உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.
  • பிராணாயாமம் -பிரணாயாமமாவது சுவாசத்தை கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவைத் தடுத்தல், :வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.
  • பிராத்தியாகாரம் – புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே :பிரத்தியாகாரமாம்.
  • தாரணை – தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்ச்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.
  • தியானம் – தியானம் என்பது மனதை ஒருபடுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.
  • சமாதி -சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது ஆகும்.

எண் பெருஞ் சித்திகள் அல்லது அட்டமா சித்திகள்

“அனி மாதி சித்திகளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே”

திருமூலர்–திருமந்திரம்-668வது பாடல்

எண் பெருஞ் சித்திகளை விளக்கம்

  1. அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
  2. மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.
  3. இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
  4. கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
  5. பிராப்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
  6. பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
  7. ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
  8. வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல்.

இத்தகைய எண் பெருஞ் சித்திகளைச் எட்டு வகையான யோகாங்க பயிற்சியினால் சித்தர்கள் பெற்றனர்.

Advertisements